105 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை! - நீர்ப்பிடிப்பு பகுதி
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளாவில் பெய்த கனமழை காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் 104.50 அடிக்கு மேல் உயர்ந்தது. இதை அடுத்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போதைய அணை நீர்மட்டம் 104.95 அடியாக இருப்பதால் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST