சாம்பலைப் பூசி கொண்டாட்டம்.. காசியில் களைக்கட்டிய ஹோலி பண்டிகை! - சாம்பலைப் பூசி கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
உத்தராகண்ட்: நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலிலும், உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோயிலிலும் வண்ண சாயப் பொடிகளுக்குப் பதிலாகச் சாம்பலைப் பூசி ஹோலி கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று (மார்ச்.8) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள காசி என்று புகழ்பெற்ற உத்தரகாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாம்பலை வைத்து ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையின் போது, வண்ண சாயப் பொடிகளுக்குப் பதிலாகச் சாம்பலை பூசி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் யாகத்தின் சாம்பலை அங்குள்ள உள்ளூர் வாசிகள் ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டும், பிரசாதமாக வீட்டிற்கும் எடுத்துச் சென்றனர். இதேபோல, இந்த ஆண்டு உஜ்ஜயினி மகா காலேஸ்வரர் கோயிலிலும் சாம்பலைப் பூசி ஹோலி பண்டிகையை அங்குள்ள பொதுமக்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.
அதே நேரத்தில், சம்வேத்னா குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில், அக்குழுவினர்கள் 'பார் பிச்காரி ரங் தரோ ரே' போன்ற ஹோலி பாடல்களுக்கு ஆடினர். இதனிடையே அவர்கள் ஒருவருக்கொருவர் ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.