Chithirai Festival : சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சையில் பரதநாட்டிய இசை நிகழ்ச்சி! - தஞ்சை பெருவுடையார் கோயில் சித்திரை திருவிழா
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த அந்த வகையில் இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தேர் நகர்வலம் முடிந்து தேரடியில் தேர் நிலைக்கு வந்ததும் மாலை முதல் இரவு வரை தேரை காண ஏராளமானோர் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது தஞ்சை பெரியகோவில் நந்தி மண்டபத்தில் சின்ன மேளம் குழுவினரின் பரதநாட்டிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப்போல் தேரடியில் கிட்டப்பா நாட்டியாலயா மாணவர்களின் பரதநாட்டிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், கவுன்சிலர் கோபால் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டு பரதநாட்டியத்தை கண்டு ரசித்தனர்.