வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறையிடும் திருவிழா கோலாகலம்!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறையிடும் திருவிழா நடைபெற்றது. அதில் லட்சக்கணக்கான பழங்கள் சூறையிடப்பட்டது. வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த சோலை மலை அழகர் பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பிறகு, அழகருக்கு காணிக்கையாக வாழைப்பழத்தை கூடை, மாட்டு வண்டி, வேன் போன்றவற்றில் கொண்டு வந்து சூறையிடுகிறார்கள்.
அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு பொதுமக்கள் அந்த வாழைப்பழத்தை பொறுக்கி எடுத்து சாப்பிடுகின்றனர். இந்த ஆண்டு லட்சக்கணக்கான வாழைப்பழம் காணிக்கையாக வந்ததாக சோலை மலை அழகர் பெருமாள் கோயில் பூசாரி கூறியுள்ளார். முன்னதாக சோலை மலை அழகர் பெருமாள் கோயிலுடன் இணைந்த லட்சுமியம்மாள் சன்னதி முன்பு இதற்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: “உன்ன எப்டி தாங்குவேன் தெரியுமா”.. நிரூபித்துக் காட்டிய நடுப்பட்டி தம்பதி!