திருடும்போது கூட்டாளியை தனியாக தவிக்க விட்டு தப்பிய இளைஞர் - வைரல் வீடியோ! - பேக்கரியில் புகுந்து திருட்டு
🎬 Watch Now: Feature Video
Published : Oct 11, 2023, 1:32 PM IST
ஈரோடு: வெள்ளோடு அடுத்துள்ள பெருந்துறை ஆர்.எஸ் அருகே தனியார் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் நேற்றிரவு (அக்.10) பேக்கரி ஊழியர்கள் வழக்கம்போல் பணிகளை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து, நள்ளிரவில் பேக்கரியில் கொள்ளை அடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்.
அதில் ஒருவர் திருடுவதை யாரும் கண்டுவிடக் கூடாது என மின் விளக்கை அணைத்து விட்டு, பேக்கரி கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். மேலும் யாராவது வருகின்றனரா என வெளியே கண்காணிப்பிற்காக மற்றொரு இளைஞர் நின்று கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், பேக்கரி கடைக்குள் சென்ற இளைஞர் அங்கு பெரிதளவில் பணம் இல்லாததால், திண்பண்டங்கள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, கார் வருவதைக் கண்ட மற்றொரு இளைஞர், அங்கிருந்து இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், தனது கூட்டாளி தப்பிச் சென்றதைக் கண்ட இளைஞர், கொள்ளையடித்த பொருட்களுடன் செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவரும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, காண்போர் மத்தியில் அதிர்ச்சியையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளோடு காவல் நிலைய போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.