கோட்டை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்! - Hosur
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. முன்னதாக இந்த பாகலூர் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர், ஓசூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் மக்கள் வழிபட்டு வந்ததாகவும், பின்பு பாகலூர் கிராமத்திலேயே வழிபட கோட்டை மாரியம்மன் கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆண்டுதோறும் பங்குனி மாதத் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் பாகலூர் கோட்டை மாரியம்மன் திருவிழா ஒரு வார காலம் நடைபெறும். அந்த வகையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் வருகிற 29ஆம் தேதி வரை கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று (மார்ச் 24) வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை சிறப்பு பூஜைகள் உடன் தொடங்கிய தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இணைந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.