நாளை திறக்கப்படும் பத்ரிநாத் ஆலயம்: 20 குவிண்டால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரெடி!
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட்: பத்ரிநாத் கோயில் கதவுகள் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மூடிய நிலையில் கோயில் கதவுகள் நாளை ஏப். 27ஆம் தேதி காலை 7:10 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்று யோக் பத்ரி மற்றும் பாண்டுகேஷ்வரில் உள்ள குபேரர் கோயிலில் கதவுகள் திறக்கப்படுவதையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
அப்போது, நூற்றுக்கணக்கான பெண்கள் மங்கள பாடல்கள் மற்றும் பஜனைகள் பாடினர். மேலும், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, பத்ரிநாத் தாமுக்கு காடு கடஸ்ரீயின் புறப்பாடு நடந்தது.
ஏப்ரல் 25 அன்று, ஆதி குரு சங்கராச்சாரியாரின் வண்டியுடன், ராவல் ஸ்ரீ ஈஸ்வர் பிரசாத் நம்பூதிரி ஜியுடன் இரவு தங்குவதற்காக காடு கட ஸ்ரீ யோக், பத்ரிநாத்தை அடைந்தார்.
இந்நிலையில் பத்ரிநாத் ஆலயத்தின் திறப்பிற்காக, சுமார் 20 குவிண்டால் மலர்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டது. இதனை, பக்தர்கள் கண்டு ரசித்துச்சென்றனர்.
இதையும் படிங்க: சித்திரை திருவிழா: வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளிய மீனாட்சி
இதையும் படிங்க: Ponniyin Selvan 2 : கல்கி சொல்லாததை மணிரத்னம் சொல்வாரா?