அடேங்கப்பா.! வேலூரில் ஆயுத பூஜைக்கு ஆயுதமே செய்த பூஜை! - navratri
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-10-2023/640-480-19841346--thumbnail-16x9-vlr.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 23, 2023, 9:36 PM IST
வேலூர்: நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று (அக்.23) கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 9-ஆம் நாளான நவம திதியில், வழக்கம்போல் ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்திற்குரிய லட்சுமி, வீரத்திற்குரிய பார்வதி போன்றோரை வணங்கக்கூடிய பண்டிகைதான் நவராத்திரி.
இந்த பண்டிகையின் ஒன்பதாவது நாளில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதன்படி, தங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்களை வைத்து, இன்று பூஜை செய்யப்படுவது வழக்கம். அதேபோல, கல்விக்கு உதவும் சரஸ்வதியை வழிபடும் வகையில், கல்வி உபகரணங்களை வைத்தும் பூஜையானது செய்யப்படும்.
இந்நிலையில், பிரபல விஐடி பல்கலைக் கழகங்களில் ஒன்றான வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Vellore Institute of Technology) பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோ மூலம் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆயுத பூஜைக்கு ஆயுதமே பூஜை செய்வது போல, இயந்திரவியல் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோக்கள் மூலம், இயந்திரங்களுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் இயந்திரங்களே காண்போரைச் சிலிர்க்க வைக்கும் வண்ணம் பிரசாதத்தையும் விநியோகம் செய்தது.