டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சுட்டிக் குழந்தைகள்.. வைரலாகும் வீடியோ! - Awareness for Anganwadi children
🎬 Watch Now: Feature Video
Published : Oct 28, 2023, 12:15 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வாலிபாளையம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து பேசும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள வாலிபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தில் பயிலும் ஜேம்ஸ் என்ற இரண்டரை வயது சிறுவன், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து தனது மழலைக் குரலில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து பேசும் வீடியோவில், ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு பரவுகிறது, கொசு கடிக்காமல் இருக்க கை கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும், நமது வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், உடைந்து போன குடங்கள், டயர்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை வீட்டைச் சுற்றி வைக்கக்கூடாது, நாம் குடிக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என சிறுவன் கூறியுள்ளார்.
மேலும், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என செய்முறை விளக்கத்தோடு பேசும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.