சம இரவு நாள் - கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்! - ஈடிவி பாரத் தமிழ்
🎬 Watch Now: Feature Video
கொடைக்கானல்: இன்று சம இரவு நாள் இரவும் பகலும் சரிசமமாக இருப்பது சம இரவு நாளாகப் பார்க்கப்படுகிறது. அறிவியலில் இது முக்கிய தினமாகப் பார்க்கப்படுகிறது.
பூமியில் இன்று சம இரவு நாள், அதாவது ஒரு நாளில் உள்ள இரவும், பகலும் சரிசமமாக இருப்பது சம இரவு நாளாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நாள் அறிவியலில் முக்கிய தினமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது வானில் இருக்கக் கூடிய சூரியன், சந்திரன் மற்றும் பூமியில் அதிக அளவில் அறிவியல் மாற்றங்கள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் இன்று மார்ச் 21ஆம் தேதி சம இரவு நாளாகப் பார்க்கப்படுகிறது. அறிவியல் நாளில் முக்கிய தினமாக பார்க்கப் படக்கூடிய இந்நாளில் இரவும் பகலும் சரிசமமாக 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவாக இருக்கிறது. வருடத்தில் இரண்டு முறை இந்த சம இரவு நாள் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமி மைனஸ் 23 டிகிரியில் வரும்பொழுது இந்த சம இரவு நாள் வருகிறது. அறிவியல் முக்கிய தினமாக இருக்கக்கூடிய இந்த நாளில், கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் 400 மாணவர்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டு இன்று விஞ்ஞானிகள் அவர்களுக்கு சம இரவு நாள் குறித்து விழிப்புணர்வு அளித்தனர்.