பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்.. ஆசிரியர் தினத்தில் ஓவிய ஆசிரியரின் நூதன போராட்டம்! - ஆசிரியர் தின விழா
🎬 Watch Now: Feature Video
Published : Sep 5, 2023, 10:41 AM IST
Teacher's Day : கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்பயிற்சி, ஓவியம், தையல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்களாக சுமார் 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி பல்வேறு முறையில் போராட்டங்களை நடத்தினர். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தங்களுக்கு பணி நிரந்தரம் எப்போது கிடைக்கும்? என்ற ஏக்கத்துடன் அசிரியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் என்ற தித்திக்கும் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டி நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திலாவது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் பெயிண்டுக்கு பதிலாக,"தித்திக்கும் தேனில்" பிரஷ் தொட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை வரைந்து கோரிக்கை விடுத்து உள்ளார்.