63 அடி தங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது அண்ணாமலையார் கோயில் ஆனி பிரம்மோற்சவம்! - tn temples
🎬 Watch Now: Feature Video
உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (ஜூலை 8) அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 63 அடி தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. முதல் நாள் தொடங்கி பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். 10ஆம் நாள் ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும்.
அதிகாலை திருக்கோயிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 06.00 மணியளவில் தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்று விழா நடைபெற்றது.
அண்ணாமலையார் சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடி மரத்தின் அருகில் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.