ஈரோட்டில் வெகு சிறப்பாக நடைபெற்ற ஐயப்ப பிரதிஷ்டை நிகழ்ச்சி…ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு! - அன்னதான விழா
🎬 Watch Now: Feature Video
Published : Dec 16, 2023, 4:12 PM IST
ஈரோடு: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வரும் நிலையில் ஈரோட்டில் ஐயப்ப சுவாமி பிரதிஷ்டை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கையில் திருவிளக்குகள் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று ஐயப்பனை வழிபட்டனர்.
ஈரோட்டில் மணிகண்டன் அன்னதான குழு சார்பில் 26ஆம் ஆண்டு அன்னதான விழா பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி நடைபெற்ற ஐயப்ப விக்ரகத்தை அழைத்தல் நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
கைக்கோளன் தோட்டம் செல்வ விநாயகர் கோயிலிலிருந்து சரண கோஷத்துடன் மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலம், மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாகச் சென்று ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. அதன் பின்னர், மண்டபத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஐயப்பன் சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த விழாவைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.