Annabhishekam: தஞ்சை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் 108 கிலோ அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம்!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் தெய்வநாயகி சமேத ஐராதீஸ்வரர் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இரண்டாம் ராஜராஜ சோழரால் கட்டபட்ட இக்கோயிலில், நம் பண்டைய கால சோழ மன்னர்களின் அறிவியல் மற்றும் அறிவு திறமைக்கும், கட்டடக் கலைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
இங்கு பல்லாயிரக்கணக்காண கலைநயமிக்க சிற்பங்களை தன்னக்கத்தேக் கொண்டுள்ளது இத்திருக்கோயில், 1954ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதன் நிர்வாகத்தினை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கவனித்து வருகிறது.
இத்தகைய பெருமைமிகு கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று (அக்.28) சாயரட்ஷை பூஜையின்போது ஐராவதீஸ்வரர் சிவலிங்க திருமேனிக்கு 108 கிலோ அன்னம், கத்திரிக்காய், தக்காளி, பூசணி, பச்சை மிளகாய், வாழைக்காய், உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்ச் உள்ளிட்ட பல்வகை பழங்கள் மற்றும் பட்சனங்களைக் கொண்டும் விசேஷ அன்ன அலங்காரம் செய்யப்பட்டது.
இதனையடுத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க, நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.