தேனியில் நடைபெறவுள்ள தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டம் - ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு! - admk
🎬 Watch Now: Feature Video
Published : Jan 8, 2024, 10:16 PM IST
தேனி: முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்களைத் திரட்டி அதிமுகவின் தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக வரும் 11ஆம் தேதி அவரது சொந்த மாவட்டமான தேனியில் உரிமை மீட்பு கூட்டம் நடத்த உள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஓபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளாக அவரால் நியமிக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவாளர்களிடையே பேசியபோது, “ தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக வரும் 11ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நடத்த உள்ளோம் அதில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் தேனி மாவட்டத்தில் அதிக தொண்டர்களை வரவழைத்துச் சிறப்பாக நடத்தி நிர்வாகிகள் அனைவரும் செயல்பட வேண்டும்” என ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்குத் தெரிவித்தார்.