அதிமுகவின் மதுரை மாநாடு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியாக எதிரொலிக்கும் - எஸ்.பி.வேலுமணி - EPS
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறை நகர்ப்புற பகுதியில் அதிமுகவின் கட்சி அலுவலகத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இதையடுத்து அய்யர் பாடி, சோலையார், மாணிக்கா பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய போது, "தமிழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை அதிமுக கட்சிக்குச் சேர்க்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருட காலத்தில் எந்தவித திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே தற்போது நிறைவேற்றி வருகிறார்கள்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களே எங்களிடம் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் தற்போது இடைத்தேர்தல் வைத்தாலும் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டு முதலமைச்சராகி தமிழகத்தில் நல்லாட்சி தருவார். மேலும், மதுரையில் நடைபெறவிருக்கும் அதிமுக மாநாடு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியாக எதிரொலிக்கும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், வால்பாறை நகரச் செயலாளர், வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணா தொழிற்சங்க தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.