"இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.." கண்களை கட்டி திருப்பதிக்கு அதிமுக தொண்டர் பாத யாத்திரை! - etv bharat tamil
🎬 Watch Now: Feature Video
Published : Sep 11, 2023, 9:45 AM IST
திருப்பத்தூர்: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சரக வேண்டுமென புதுப்பேட்டையிலிருந்து திருப்பதி வரை கண்களை கட்டி அதிமுக தொண்டர் ஒருவர் பாதயாத்திரை சென்று உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை ராஜவீதி தெருவை சேர்ந்தவர் அதிமுக தொண்டர் சீனிவாசன். இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என விரதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதுப்பேட்டையில் இருந்து திருப்பதி வரை கண்களை கட்டிக் கொண்டு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட்ட 20க்கும் மேற்பட்டோர் உடன் பாதயாத்திரை சென்று உள்ளார்.
இந்நிகழ்வினை ஜோலார்பேட்டை அதிமுகவின் முன்னாள் தலைவரும், ஒன்றிய செயலாளருமான ரமேஷ், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் ஒன்று சேர்ந்து சீனிவாசனின் கண்கட்டி பாதயாத்திரையை தொடங்கி வைத்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டுமென புதுப்பேட்டையில் இருந்து திருப்பதி வரை கண்களை கட்டி பாதயாத்திரை சென்ற அதிமுக தொண்டரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.