India Couture Week 2023: ராம்ப் வாக்கில் திகைக்க வைத்த அதிதி ராவ் - ஆடை அழகின் பின்னணி என்ன? - Actress Aditi Rao
🎬 Watch Now: Feature Video
இந்தியா கோச்சர் வீக் 2023 (India Couture Week 2023)-இல் பங்கேற்ற நடிகை அதிதி ராவ் ஹைதாரி தனது உடையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பேஷன் உலகின் மிக பிரமாண்டமான நிகழ்ச்சியான இந்தியா கோச்சர் வீக் 2023 நேற்று முன்தினம் (ஜூலை 25) முதல் வருகிற ஆகஸ்ட் 2 வரை டெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.
இதில் காற்று வெளியிடை படத்தின் நாயகியான நடிகை அதிதி ராவ் ஹைதாரி பங்கேற்றார். இந்த பேஷன் நிகழ்ச்சியில் ராஜ தோரணையில் ஜொலித்த அளித்த அவரது ஆடை அனைவராலும் பெரிதும் ஈர்க்கப்பட்டது. முழுக் கையுடன் கூடிய ஸ்டைலான பிளவுஸ் அணிந்திருந்தார். அந்த பிளவுஸில் மிகவும் நுணுக்கமான, அழகான எம்பிராய்டரி மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
லைட் மேக்கப்புடன் தோன்றிய அவர், மங்க்டிகா (நெற்றிச்சுட்டி) மூலம் தனது தோற்றத்தை மேலும் மெருகூட்டி காட்டினார். பிரபல ஆடை வடிமைப்பாளரான ரிது குமார், அதிதிக்கு இந்த ஆடையை வடிவமைத்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பேஷன் பிரியர்கள் ரிது குமாரின் ஆடை வடிவமைப்பு ஒரு வரலாற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது என கூறி ரிதுவின் கைவினைப் பாரம்பரியத்திற்கு எழுந்து நின்று வெகுவாகப் பாராட்டினர்.
மேலும், இந்தியா கோச்சர் வீக் பட்டியலில் அதிதி ராவ் முதலிடம் வகிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிதி ராவ் இந்த பேஷன் ஷோவில் பங்கேற்று ராம்ப் வாக் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.