அரசியல் கேள்விகளை தவிர்த்த குஷ்பு! - நடிகை ரஞ்சனா வழக்கு
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 9:00 AM IST
சென்னை: சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் தனியார் துணிக்கடையை நடிகையும், பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கிரிக்கெட் பற்றி கேள்வி கேட்டதற்கு பதிலளித்த குஷ்பு, “இந்திய அணி கிரிக்கெட்டில் தனிபட்ட முறையில் பெயர் வர வேண்டும் என எந்த வீரரும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறார்கள், கட்டாயம் வெற்றி வாய்ப்புகள் அதிகம். இந்திய அணி கண்டிப்பாக உலக கோப்பையைக் கைப்பற்றும்” என்றார்.
மேலும் துணை நடிகை ரஞ்சனா தொடர்பாக கேட்ட கேள்விக்கு, பேருந்து படில்கட்டில் இருந்து கீழே விழாமல் மாணவர்கள் தப்பித்தனர். அதுகுறித்து தாய்மார்கள் உள்பட யாரும் கேட்கவில்லை. ஆனால் ரஞ்சனா நாச்சியார் தட்டிக் கேட்டார். அதற்கு கைது செய்கிறீர்கள். அதனால்தான் புட்போடில் தொங்கி மாணவர்களின் உயிரிழப்பு என்பது அடிக்கடி நடக்கிறது.
ஆனால், தற்போது பேருந்தில் ஒரு படியை எடுத்துள்ளனர். அதை மட்டும் செய்தால் போதுமா? அதற்கு என்ன அர்த்தம்? சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்க மாட்றாங்க, ஒரு படிக்கட்டை எடுத்தால் மட்டும் பிரச்னை தீருமா என கேள்வியும் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, அரசியல் கேள்வி வேண்டாம் என தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.