"வாழ்க்கைல வேணும் டாஸ்க்.. சேஃப்டிக்கு போடுங்க மாஸ்க்" - வேலூரில் பஞ்ச் பேசிய டி.ஆர்!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: பிரபல திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது வேலூரில் உள்ள அவரின் சினிமா தியேட்டர் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து செல்ல முயன்ற டி.ராஜேந்தரை பார்த்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது அவருடன் பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அந்த சமயம், அங்கு இருந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் செல்பி எடுக்க முயன்ற போது அவரை அருகில் அழைத்து, படம் எடுக்கச் செய்தார் டி.ஆர். பின்னர் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனக்கே உரிய ஸ்டைலில், "வாழ்க்கையில எல்லாருக்கும் வேணும் டாஸ்க்... உங்களோட சேஃப்டிக்கு போடுங்க மாஸ்க்", அரசாங்கம் சொல்வதை அனைவரும் பின்பற்றுங்கள் என கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க புதிய பஞ்ச் டயலாக் ஒன்றை டிஆர் கூறினார்.
மேலும் அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது இந்த சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது.