‘வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’ - சென்னை தெற்கு கூடுதல் ஆணையர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கவலை தெரிவித்த நிலையில், பொய்யான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக டிஜிபி சைலேந்திர பாபு ஆதாரங்களுடன் வெளியிட்டார்.  

வடமாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்று பொய்யான வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்தார். பொய்யான வதந்தி பரப்பியதாக தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஒரு வழக்கும், கிருஷ்ணகிரியில் ஒரு வழக்கும், திருப்பூரில் ஒரு வழக்கும் தமிழ்நாடு காவல் துறையால் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “வடமாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்ற வதந்தி செய்திகளை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்” என தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது, சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று காவல் துறையினர் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருவதாகவும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லது 100 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறினார். 

மேலும் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவரை சைபர் செல் மற்றும் சைபர் லேப் தொடர்ச்சியாக கண்காணித்து கண்டுபிடித்து வருவதாகவும், சென்னையில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை என அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனை காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாக கூறுவது முற்றிலும் தவறு எனவும் ஹோலி பண்டிகைக்காக சொந்த மாநிலத்திற்கு செல்வதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.