போதையால் பறிபோன உயிர் - முதல் மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு! - fire department
🎬 Watch Now: Feature Video
சென்னை: தாம்பரம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர், டேனியல்(23). இவர் வீட்டில் குடும்பச் சண்டை காரணமாக பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனது நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது டேனியல் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அங்கு முதல் மாடியிலிருந்து மது அருந்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் டேனியல் தற்கொலை எண்ணத்துடன் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். அப்போது அங்கு சென்ற உயர் மின் அழுத்தக் கம்பிகள் இடையே சிக்கி உயிருக்குப் போராடினார்.
இதுகுறித்து தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்த நிலையில் மின்சாரத்துறையினர் மூலம் மின்சாரம் நிறுத்தப்பட்டு தீயணைப்பு வீரர்கள் டேனியலை மீட்டு, அந்த வானத்தின் மீதே சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து உயிர்காக்க முயன்றனர்.
ஆனால், டேனியல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மின்சாரக் கம்பிகள் இடையே உடல் சிக்கிய காட்சியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பேருந்து முன்பு பாய்ந்து பெண் பலி - மகனின் கல்லூரி கட்டணத்திற்காக விபரீத முடிவு!