Video: பழனி அருகே பட்டப்பகலில் கேசுவலாக பைக் திருடும் ஆசாமிகள்! - crime news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 25, 2023, 9:59 AM IST

திண்டுக்கல்: பழனி அருகே உள்ள பெருமாள் புதூரை சேர்ந்தவர் குமார். இவர் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் பின்புறம் உள்ள துணிக்கடையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையின் உள்ளே சென்று விட்டு சில நிமிடங்களில் திரும்ப வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கே தனது இரு சக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். பின்னர் தனது பைக் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

அதன் பிறகு அந்த கடையில் பொறுத்திருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்தபோது ஹெல்மெட்டுடன் வந்த ஒருவர் இருசக்கர வாகனத்தை லாவகமாகத் தள்ளிச் செல்வதும், பின்னால் வந்த நபர் இருசக்கர வாகனத்தைத் திருட உதவியாக இருந்ததும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து குமார் பழனி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பழனி நகரின் மையப் பகுதியில் பட்டப்பகலிலேயே இரு சக்கர வாகனத்தைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.