Viral Video: ஈரோடு வனச்சாலை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் யானை! - elephant video viral

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 13, 2023, 1:34 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தில் இருந்து திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடகத்துக்கு மைசூர் தேசிய நெடுஞ்சாலை பயணிக்கிறது. வனத்தின் மத்தியில் செல்லும் இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதேசமயம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி கோயிலுக்கு வருவது வழக்கமாக உள்ளது.  

பண்ணாரி வனத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளன. இந்நிலையில் புதுக்குய்யனூர் வனத்தில் இருந்து வந்த ஒற்றையானை சாலையோரம் ஒய்யாரமாக நடந்து சென்றபோது அதனை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது யானை சாலையோரம் கிடந்த பிளாஸ்டி கழிவு எடுத்து சாப்பிடும் போது வாகன ஓட்டிகள் சாப்பிடாதே இது பிளாஸ்டிக் என யானைக்கு அட்வைஸ் செய்யும் காட்சி வீடியோவாக பதிவாகியுள்ளது.  

இந்த வீடியோவை வாகன ஓட்டிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால் சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி பகுதி வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "யானைகள் வீடியோ எடுப்பதும் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தவறான தகவல் வெளியிட்டால் சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.