"12 டூ 10 உனக்கு; 10 டூ 12 எனக்கு" - கசம் பகுதியில் நூதன மது விற்பனை.. கண்டுகொள்ளுமா வேலூர் மாவட்ட நிர்வாகம்! - vellore tasmac
🎬 Watch Now: Feature Video
வேலூர்: காட்பாடி அடுத்த கசம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகின்றது. காலை 12 முதல் இரவு 10 மணி வரை அரசு நிர்ணயித்த நேரத்தில் இயங்கி வருகின்றது. ஆனால், அரசு டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே தனியாருக்குச் சொந்தமான பார் ஒன்றும் இயங்கி வருகிறது.
இந்த பாரில் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடை மூடிய பிறகு மறுநாள் நண்பகல் 12 மணிக்குத் திறக்கும் வரை தனியாரில் பாரில் சட்டவிரோதமாகக் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் எப்போது அந்த பாரில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
மதுபானம் வாங்க மதுப் பிரியர்கள் இரவு பகலாக அந்த தனியார் பாரில் குவிந்து வருகின்றனர். கள்ளச் சந்தை குறித்து அப்பகுதி மக்கள் அருகிலுள்ள திருவலம் காவல் நிலையத்திற்குப் பல முறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள மக்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.