இணையத்தில் வைரலாகும் ஆரணி ஓவியரின் கருப்பு அரிசி 'கலைஞர் 100' வீடியோ! - arani news
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி பகுதியைச் சேர்ந்த ஓவியர் 'கலைஞர் 100' என்ற ஓவியத்தைக் கருப்பு அரிசியால் ஓவியம் வரைந்த வீடியோ வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த ஹரிஷ்பாபு(45) இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆரணி பகுதியில் ஓவியராக இருந்து வருகிறார்.
இவர் கலைஞர் கருணாநிதி மீது உள்ள பற்றால் கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு ஹரிஷ்ப்பாபு தனது வீட்டில் அரிசியில் கருப்பு வண்ணம் பூசி கருணாநிதியின் புகைப்படத்தைப் பார்த்து கலைஞர் 100என்கின்ற ஓவியத்தை 2 மணி நேரத்தில் தத்ரூபமாக ஓவியம் வரைந்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு அரிசியில் கலைஞர் 100 என்கின்ற படத்தைத் தத்ரூபமாக வரைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.இந்த ஓவியத்தை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர் மேலும் இந்த ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்து உலக அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவு: திருமாவளவன் விமர்சனம்!