சாலையை கூலாக கடந்து செல்லும் சிறுத்தை புலி... வாகன ஓட்டிகள் பீதி! - சிறுத்தை புலி வீடியோ வைரல்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: பந்தலூர் அருகே திடீரென சாலையை கடந்து சென்ற சிறுத்தை புலியால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதன் அச்சுறுத்தல் அற்ற போக்கால் பயம் தெளிந்த வாகன ஓட்டிகள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு (ஆகஸ்ட். 20) பந்தலூர் அருகே உள்ள இன்கோ நகர் சாலையில் சிறுத்தை புலி ஒன்று சாலையை கடந்து சென்று வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, சிறுத்தை புலி சாதாரணமாக சாலையை கடந்த காட்சியை வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மேலும், வனவிலங்குகள் இரவு நேரங்களில் சாலையை கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும் வாகனத்தை மிதமான வேகத்தில் ஓட்டிச் செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.