Video:கிருஷ்ணகிரியில் குறவர் இன மக்களின் சாட்டை அடி விநோதத் திருவிழா - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் ஒன்றியம், மாரிசெட்டி ஊராட்சி எம்.கொட்டாவூர் கிராமத்தில் குறவர் இன மக்களின் விநோத திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பெரியாண்டிச்சி அம்மனின் உருவம் செய்து பக்தர்கள் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர். இந்த திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. விழாவில் ஓசூர், திருப்பத்தூர், மேல்மலையனூர், அரூர், சேலம், வேலூர், குப்பம், பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர். பக்தர்கள், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஆகியோர் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பூசாரியிடம் சாட்டையடி வாங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செய்தனர்.