மகளிர் ஸ்பெஷல்: மதுபானி ஓவியத்தை தத்ரூபமாக வரையும் ஆசிரியை! - மதுபானி
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி: முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓவியர் சோலை அபிராமி. இவர் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல முக்கிய நிகழ்வுகளை பெரிய அளவில் ஓவியங்களாக தீட்டி வரும் இவர், மகளிர் தினத்தை முன்னிட்டு, அதனை பெருமை படுத்தும் விதமாக தனது இல்லத்தில் 9 அடி நீளம், 7 அடி அகலத்தில் மதுபானி ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.
இந்த ஓவியமானது ஒரு கர்ப்பிணி பெண்ணை பூமா தேவி தாங்குவது போலவும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தீட்டப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்ததோடு, ஓவிய ஆசிரியை அபிராமியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து பேசிய ஓவியர் சோலை அபிராமி, "பல ஆண்டுகளாக வித்யாசமான முறைகளில் ஓவியம் தீட்டி வருவதாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வட மாநில கலாச்சாரமான மதுபானி ஓவியம் வரைந்ததாகவும்" தெரிவித்தார். மேலும், சற்றும் இடைவெளி இல்லாமல் வரையப்பட்ட இவரின் ஓவியத்தை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: ‘வாத்திய கலைஞர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்க வேண்டும்’ - தவில் வித்வான் கோரிக்கை