CCTV:'அட போப்பா.. எவ்வளவு விலை வித்திட்டிருக்கு' - வீட்டிலிருந்து சிலிண்டரை திருடிச் செல்லும் நபர் - குரோம்பேட்டையில் கேஸ் சிலிண்டர் திருட்டு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18459705-thumbnail-16x9-aspera.jpg)
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி, 3வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர், ஆனந்தன். இவரது வீட்டிற்கு இரு பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து, ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருவதாகவும், அதற்கு நன்கொடை வேண்டும் என்றும் ஆனந்தனின் மனைவியிடம் கேட்டுள்ளனர். அவர் நன்கொடை இல்லை எனக்கூறியதும் அந்தப் பெண்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அந்தப் பெண்கள் வந்து சென்ற பிறகு, ஆனந்தனின் வீட்டிற்கு கீழே உள்ள வீட்டிலிருந்து சமையல் சிலிண்டர் காணாமல் போயுள்ளது. இதையடுத்து குடியிருப்பு சங்கத்தினர் அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்த்துள்ளனர். அதில், சிலிண்டர் திருடப்பட்டது தெரியவந்தது.
ஆனந்தனின் வீட்டிற்கு நன்கொடை கேட்டு வந்த இரு பெண்களும், அங்கிருந்து வெளியே சென்று ஒரு நபரிடம் பேசுகின்றனர். சிறிது நேரத்தில் இரு பெண்களும் வேறு எந்த வீட்டிலும் நன்கொடை கேட்காமல் சென்று விடுகின்றனர். பின்னர் அந்த நபர் வீட்டிற்குள் சென்று சிலிண்டரை தூக்கிச் செல்கிறார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நன்கொடை வசூலிப்பது போல் பட்டப்பகலில் வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த கும்பலை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.