சாலையை டாஸ்மாக் பாராக மாற்றிய நபர்.. தாரை சைடீஷாக தொட்டு மது குடித்த வீடியோ! - person drinking alcohol viral video
🎬 Watch Now: Feature Video
Published : Oct 30, 2023, 8:10 PM IST
வேலூர்: நடுரோட்டில் அமர்ந்து கொண்டு மதுப் பிரியர் ஒருவர், மது அருந்தும் போது சைட்டிஷ்காக ரோட்டை தொட்டுச் சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கே வி குப்பம் பேருந்து நிலையம் அருகே குடியாத்தம், காட்பாடி செல்லும் சாலையில் நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு மதுப்பிரியர் ஒருவர் மது அருந்தினார். அப்போது சைடிஷ்க்காக சாலையைத் தொட்டுச் சாப்பிடுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அருகிலிருந்த சில நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சாலையில் அமர்ந்து ஒருவர் மது அருந்தியது தொடர்பாக கே வி குப்பம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் வராதது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் அங்கிருந்த சில பொதுமக்கள் ஒன்றிணைந்து நடுரோட்டில் அமர்ந்து மது அருந்திய நபரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: "ஒரு மணி நேரத்தில் சாகப்போகிறேன்" - வேலூர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!