VIDEO: உணவுக்காக காட்டை விட்டு குட்டியுடன் ஊருக்குள் வந்த யானைக் கூட்டம் - A herd of elephants came in search of food
🎬 Watch Now: Feature Video
கோவை அருகே தொண்டாமுத்தூர் வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவுத் தேடி கூட்டம், கூட்டமாக ஊருக்குள் வரும் நிலையில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்திச்செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்த நிலையில் விராலியூர் கிராமத்தில் உணவுதேடி குட்டியுடன் வந்த காட்டு யானைக்கூட்டம் சாலைகளில் அணிவகுப்பு நடத்தின. இதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த கிராமத்தினர், அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் சிலர் யானைக்கூட்டத்துக்கு டாட்டா சொல்லி வனப்பகுதிக்குள் வழியனுப்பி வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.