Republic day: புதுச்சேரியில் வண்ண விளக்குகளால் மிளிரும் அரசு கட்டடங்கள்! - G20 conference
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி: நாடு முழுவதும் குடியரசு தின விழா 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடப் புதுச்சேரி அரசு பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. புதுச்சேரி அரசின் நினைவுச் சின்னமான ஆயி மண்டபம், இதன் எதிரில் உள்ள சட்டமன்றம், ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவர் போன்றவை வண்ணமயமாகியுள்ளதைச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் கண்டு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
இவ்விரு கட்டிடடங்களும் இன்று (ஜன.26) பொது மக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலக கட்டடம் மின் மயமாகியுள்ளது. மேலும் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மின் விளக்கில் "ஜி20 இந்தியா" என ஒளிவதை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.