Karnataka Election: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 65 பேர் ஒன்றாக வாக்களிப்பு! - சிக்காபல்லபூர்
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (மே 10) காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இன்று காலை முதலே அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பொதுமக்களும் ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில், சிக்காபல்லபூர் மாவட்டத்தில் உள்ள சிக்காபல்லபூர் சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த சிக்காபல்லபூர் தொகுதிக்கு உள்பட்ட பந்தே (Bande) குடும்பத்தைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்டோர் ஒன்றாக வந்து தங்களது வாக்குகளை அளித்துள்ளனர். அதிலும், இவர்கள் 15 முறைக்கும் மேல் தொடர்ந்து ஒன்றாக வாக்களிக்க வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இது குறித்து பந்தே குடும்பத்தினர் கூறுகையில், “குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்களது வேலையில் தினமும் மும்முரமாக இருப்பர். ஆனால், தற்போது நாங்கள் ஒன்றாக வாக்களிக்க வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்” என தெரிவித்தனர். மேலும், வாக்குப்பதிவை ஒட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.