தமிழ்ப் புத்தாண்டு - 6 கோடி ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தமிழ் வருட புத்தாண்டை முன்னிட்டு கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோயிலில் 83-வது சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தக் கோயிலில் சித்திரை முதல் நாளான இன்று (ஏப்.14) 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் என சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தைக் கொண்டும் தங்க, வைர ஆபரணங்களைக் கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
இதனைக் காண ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டுச் சென்றனர். இதேபோல் கோவையிலுள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜையுடன் வழிபாடு செய்து தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இது குறித்து கோயில் நிர்வாகி சோமசுந்தரம் கூறுகையில், “ சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு முத்து மாரியம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: Tamil New year: கோவை முந்தி விநாயகர் கோவிலில் முந்தியடிக்கும் பக்தர்கள் கூட்டம்!