குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணையப் போராடிய மார்ஷல் நேசமணியின் 54ஆவது நினைவு தினம்! - Remembrance Day
🎬 Watch Now: Feature Video

கன்னியாகுமரி: திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தையொட்டி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்திற்குத் தலைமை வகித்துப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர் ’மார்ஷல் நேசமணி’, ஆவார். எனவே, அவரது 54ஆவது நினைவு தினத்தையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள நேசமணி மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல நாகர்கோவில் மாநகராட்சி மேயர் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதை தொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிழக்கு மாவட்டத் தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST