தேனியில் 41 அடி ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா! - senkulaththuppatti anjineyar
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளம் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியில் 41 அடி அளவில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த 41 அடி விஸ்வரூப ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று (ஜூன் 26) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்காக பிரத்யேகமாக யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இரண்டாம் கட்ட யாக பூஜையில் நாடி சந்தானம், தச தரிசனம், கோ பூஜை, வேதபாராயணம் உட்பட அனைத்தும் நடைபெற்று மகா பூரணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டது.
இரண்டு கால யாக பூஜைகள் முடிவடைந்த பின்னர் கோயில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 41 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், ஆஞ்சநேயர் உற்சவ சிலைக்கு பால், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உட்படப் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.
தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரத்திற்குப் பின்னர், ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது, இந்த நிகழ்விற்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும், தமிழகத்தில் 50 இடங்களில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது என மஹோன்னத பாரதம் டிரஸ்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் காண்க: வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா!