International yoga day: 2 நிமிடங்களில் 40 வகையான யோகாசனங்களை செய்து அசத்திய சிறுமி - aathiyogi yoga center
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: உலக யோகா தினமான இன்று ஆரோக்கிய வாழ்விற்கு யோகப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மயிலாடுதுறையில் ஆதியோகி யோகா மையம் சார்பாக நடத்தப்பட்ட யோகா சிறப்பு பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டன்ர். இதில் ஒரு மாணவி 2 நிமிடங்களில் 40 வகையான யோகாசனங்களை செய்து அசத்தியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, உலக யோகா தினத்தை முன்னிட்டு, தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்த ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி மோனிதா இரண்டு நிமிடங்களில் விருச்சிகாசனம், உஸ்டாசானம், விக்கிரமாசனம், நடராஜாசானம், அர்த்தபாதாசனம், மயூராசனம் உள்ளிட்ட 40 வகையான யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினார்.
இந்நிலையில், மாநில அளவிலும் தேசிய அளவிலும் சிறுவயதிலேயே யோகாவில் சாதனைப் புரிந்து வரும் சிறுமி மோனிதாவை ஆதியோகி யோகா மைய நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கிப் பாராட்டினர். தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் சிறப்புரையாற்றினர்.
பின்னர், அதிகாலை தொடங்கிய இந்த சிறப்பு யோகா பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் யோகாசனம் செய்தனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள ஆதியோகா பயிற்சி மையத்தில் சிறப்புப் பயிற்சி நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:பெண்மையின் பெருமைகளை மூச்சு விடாமல் பேசி சிறுமி.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மாவட்ட ஆட்சியர்!