சிதம்பரத்தில் 72 கிலோ சாக்லேட்டில் 3 அடி உயர நடராஜர் சிலை செய்து அசத்தல்!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 7, 2023, 3:39 PM IST
கடலூர்: சிதம்பரம் தெற்கு ரத வீதியில் சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட பேக்கரி கடையில் பெல்ஜியம் சாக்லேட்டில் 5 நாட்களில் நடராஜர் சிலை தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலை 3 அடி உயரத்திலும், 2 அடி அகலத்திலும் 72 கிலோ சாக்லேட்டில் அச்சு அசலாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட நிலையில் இருந்தால் இந்த பெல்ஜியம் சாக்லேட்டில் செய்யப்பட்ட நடராஜர் சிலை சுமார் 6 மாதம் வரை தன்மை மாறாமல் இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேச்சு - ஓட்டுநர், நடத்துநரின் உரிமம் ரத்து! அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் தீர்வு!
மேலும் இந்த பேக்கரியில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான புதிய மாடல்கள் கொண்ட சாக்லேட்டில் கேக்குகள் செய்து அசத்தியுள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட கடைக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து நடராஜர் சிலையை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: கடலூரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் - வேலூர் இளைஞர்கள் பயன் பெற ஆட்சியர் அறிவிப்பு..!