திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை..! - Thanjavur News
🎬 Watch Now: Feature Video
Published : Jan 1, 2024, 5:15 PM IST
தஞ்சாவூர்: தேவாரப்பாடல் பெற்றதும், கடன் நிவர்த்தி ஸ்தலம் என்று போற்றப்படுவதுமான கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வர திருக்கோயில் பிரகாரத்தில் உள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரரை, வாரம் தோறும் வரும் திங்கட்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு, அதிலும், கார்த்திகை சோமவாரம் எனப் போற்றப்படும், கார்த்திகை மாத திங்கட்கிழமை இன்னும் கூடுதல் விசேஷம் எனக் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புப் பெற்ற சைவத்திருத்தலத்தில் இன்று (ஜன.01) 2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பு மற்றும் மார்கழி மாத திங்கட்கிழமை என்பதனை ஒட்டியும், திருக்கோயில் பிரகாரத்தில் உள்ள ரிண விமோசன லிங்கேஸ்வர சுவாமிக்கு, மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பல்வேறு விதமான பழங்கள், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என பல்வகை வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து, விசேஷ மலர் அலங்காரம் செய்விக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.