தமிழ் தேர்வு எப்படி.? 12ஆம் வகுப்பு மாணவிகள் கருத்து - Tamil Nadu 12th Board Exam 2023
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (மார்ச் 13) பொதுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தமாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதுகின்றனர். இன்றைய தமிழ் தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.
இந்த தேர்வு குறித்து சென்னை எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், எளிமையாக இருந்ததாகவும், படித்த பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டாகவும் தெரிவித்தனர். இந்த தேர்வினை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். முன்னதாக, திருச்சி ஆப்ட் மார்சல் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் தேர்வினை முடித்து விட்டு வந்த மாணவர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி சீருடையில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்