நயாகரா நீர்வீழ்ச்சியில் மிளிர்ந்த இந்திய மூவர்ணக் கொடி!
🎬 Watch Now: Feature Video
நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதேபோல் கனடாவிலுள்ள இந்தியர்களும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். குறிப்பாக, உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணங்கள் பிரதிபலித்தன. மூவர்ணக் கொடியின் வண்ணங்களை கொண்ட விளக்குகள் இரவு நேரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபலிக்கப்பட்டது. இந்த காட்சி பார்ப்போரை சிலிர்பூட்டும் வகையில் இருந்தது. இந்த காணொலியை கனடாவில் உள்ள இந்திய தூதரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.