கோட்டா கச்சோரி ரெசிப்பி தெரியுமா.? - கச்சோரி ரெசிப்பி
🎬 Watch Now: Feature Video
வட மாநிலங்கள், தெலங்கனா மற்றும் ஆந்திராவில் செய்யப்படும் கோட்டா கச்சோரி ரெசிப்பி சிறந்த சிற்றுண்டி வகையாகும். மிகவும் மிருதுவாகவும், சுவையாகும் இருக்கும் கோட்டா கச்சோரியை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் அரை கப் பாசிப் பருப்பை எடுத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் மைதா மாவு, அரை கப் அளவு எண்ணெய், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மாவாக பிசைந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதன்பின் ஊற வைத்த பாசிப் பருப்பை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைக்கவும். இதையடுத்து ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதித்தப்பின், சீரகம் அரை டீஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, பச்சை மிளகாய் 1 டீஸ்பூன், மல்லித்தூள் 1 டீஸ்பூன், வெந்தய தூள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியப்பின் அரைத்து வைத்த பாசிப் பருப்பை அதில் சேர்க்கவும்.
அதன்பின் கரம் மசாலா அரை டீஸ்பூன், இஞ்சிப்பொடி அரை டீஸ்பூன், மிளகாய் தூள் அரை டீஸ்பூன் சேர்ந்து வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்ந்து எடுத்து வைக்கவும். அதன்பின் உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும். இந்த உருண்டையை மைதா மாவு கலவையின் உள்ளே சேர்ந்து கொழுக்கட்டை போல் செய்துகொள்ளவும். இது கச்சோரி வடிவில் வந்துவிடும். இதனை எண்ணெய்யில் போட்டு பொன் நிறமாகும் வரை வறுத்து எடுத்தால் கோட்டா கச்சோரி ரெடியாகிவிடும்.