பாங்காக்கில் இருந்து சென்னை திரும்பிய விஜய்.. வைரலாகும் வீடியோ! - சினிமா செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-11-2023/640-480-20011012-thumbnail-16x9-vj.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Nov 13, 2023, 11:34 AM IST
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர், விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி 68” படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
முன்னதாக, தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதற்காக படக்குழு தாய்லாந்து செல்லும் புகைப்படம் வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக, விஜய் லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை முடித்து விட்டு, தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்றார். விஜய் சென்னை விமான நிலையம் மூலம் தாய்லாந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
தாய்லாந்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக படக்குழு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாய்லாந்து சென்ற விஜய், நேற்று ( நவ.12) மீண்டும் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் விஜய் நடந்து சென்று தனது காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.