அயோத்தி படக்கதை சர்ச்சை விவகாரம் - நடிகர் சசிகுமார் சொன்ன அந்த பதில்! - கமல் ரசிகர் மன்றம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 7, 2023, 6:00 PM IST

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சசிகுமார் நடித்து அண்மையில் வெளி வந்துள்ள 'அயோத்தி' திரைப்படம்; தஞ்சாவூரில் உள்ள தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் 'நந்தன்' என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்த நடிகர் சசிகுமார் அயோத்தி திரைப்படத்தை கடந்த மார்ச் 6ஆம் தேதி மாலை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். 

பின்னர், திரைப்படம் முடிந்து அவர் பேசும் போது, 'சாதி, மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விஷயம் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத் தான் இந்த படத்தில் கூறியுள்ளோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

மேலும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது' என்றார்.

 இந்தப் படத்தின் கதை குறித்த சர்ச்சைகளுக்குப் பதில் அளித்த அவர், 'இந்தக் கதை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விஷயம் தான். இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார். 

இதுபோல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார், எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விஷயம்' என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திரையரங்க நிர்வாகிகள், கமல் ரசிகர் மன்றம், விஜய் நற்பணி மன்ற ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.