Video:பொள்ளாச்சியில் கள்ளு விற்பனை ஜோர் -கண்டுகொள்ளாத காவல்துறையினர் - Counterfeit sales should be banned
🎬 Watch Now: Feature Video

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்டது, கொல்லபட்டி கிராமம். கொல்லபட்டி சுடுகாட்டிற்கு மேற்கில், நல்வழி கவுண்டர் தோட்டத்திற்கு அருகில் உள்ள மாரிமுத்து என்பவரது தோட்டத்தில் தடை செய்யப்பட்ட கள்ளு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தென்னை மரத்தில் இருந்து கள்ளு இறக்கி விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை நெகமம் காவல்துறை கண்டு கொள்வதில்லை என்றும் இதனால் கூலி வேலைக்கு செல்லும் ஆண்கள் காலையில் கள்ளு குடிக்க சென்று விடுவதாகவும் குடித்து விட்டு வேலைக்கு செல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்படுவதாக வேதனைத் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST