ஒன்றிய அரசு தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாஸ் பதில் - mk stalin
🎬 Watch Now: Feature Video
16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'ஒன்றிய அரசு என்று சொல்வதை குற்றம் போல நினைக்க வேண்டாம்; அரசியலமைப்பின் முதல் வரி இந்தியா. அதாவது பாரதம் பல மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம் என்று தான் அரசியலமைப்புச்சட்டம் தெரிவிக்கிறது. எனவே, அது ஒன்றிய அரசு தான்' என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு உரிய விளக்கமளித்தார்.