சூலக்கல் மாரியம்மன் கோயிலில் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு! - சூலக்கல் மாரியம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சூலக்கல் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு பொதுமக்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்களாக 36 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்மனுக்கு ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றினர். சக்கரம், நட்சத்திரம், ஓம் சதுரம் என விளக்குகள் கொண்டு பொதுமக்கள் தீபம் ஏற்றினர். தீபம் ஏற்றியதால் சூலக்கல் மாரியம்மன் கோயில் தீப வெளிச்சத்தில் மின்னியது கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.