இதய நோயைக் கட்டுப்படுத்தும் ஹோம் மேட் சாக்லேட்..! - home made chocolates
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4480472--thumbnail-3x2-choco.jpg)
நீலகிரி: குன்னூர் பகுதியில் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட் எளிதில் உருகுவதில்லை, மேலும் ஆரோக்கியத்திற்கும் இதய நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் ஹோம் மேட் சாக்லேட் உறுதி அளிக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த சாக்லேட்டுகள் முந்திரி, உலர்ந்த திராட்சை, பாதாம், பிஸ்தா ஆகியவை சேர்க்கப்பட்டு பல சுவைகளில் 10க்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாக்லேட்டுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வகையில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சாக்லேட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.