திமுகவினர் ஓட்டுக்கு பரிசு: எதிர்க்கட்சி வேட்பாளர்கள் முற்றுகைப் போராட்டம் - திருச்சி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் 18 வார்டுகளும் உள்ளன. மண்ணச்சநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவனின் ஆதரவாளர்கள் இந்த 33 வார்டுகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகளை வழங்கி வந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், இதனை தடுக்கக் கோரி சுயேச்சை வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஆகியோர் மண்ணச்சநல்லூர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 33 வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் திமுக அரசைக் கண்டித்தும் தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல் துறையினரை கண்டித்தும் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST